மனித குலத்தின் மகத்துவமே காதலும் உழைப்பும் தான்❤️

 மனித குலத்தின் மகத்துவமே காதலும் உழைப்பும் தான்❤️

By Dharani Ramachandran

அத்தனை அசாத்தியமான வாழ்வியலை ஒரு வரியில் உணர்ந்த ஆச்சரியம்... இருந்தும் புரியவில்லை இதை சொன்னது யார் என்று...?!!!! ஒற்றை புகைப்படம் உதவியது புரிதலுக்கு அப்பாற்பட்டு இன்றும் உயிரோட்டமாய் இருக்கும் கார்ல் மார்க்ஸ் மற்றும் ஜென்னிக்கும் இடைப்பட்ட காதல் காவியத்தை.


ஆழமான சோசியலிச கொள்கைகளால் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் படிக்க தவறிய கார்ல் மார்க்ஸ் இன்று முதல் ஜென்னி மார்க்ஸால் என் கவனத்திலிருந்து தவற போவதில்லை.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் ஒரு பெண்ணின், காதலுடன் கலந்த ஒரு உந்துவிசை அசாத்தியங்களில் சாத்தியமாக கூடியவை.

உலகமே அதீத காதலாலும், உச்சபட்ச உழைப்பாலும் தான் மேல்நிலை அடைந்தது என்பதை ஆதாம் ஏவாளின் காலம் முதல் பிற்பட்ட நவநாகரீக மனித குல வளர்ச்சி பாதை பறைசாற்றுகின்றது.

சாதாரண வாழ்க்கையில் இருந்து சமூக வளர்ச்சி பணிக்கு தன்னை ஆர்பணித்து கொண்ட 17 வயது இளைஞனாக கார்ல் மார்க்ஸின் காதலானது 21 வயது உயர்குடி பிறந்த ஜென்னி மீது மலர அதுவே பிற்காலத்தில் 130 கோடி மக்களை பின்பற்ற செய்த மார்க்சிய கொள்கைகளை 'மூலதனம்' என்னும் நூலின் மூலம் பிரகடனப்படுத்தியவர். 

கார்ல் மார்க்ஸின் விடாப்பிடியான சமூக வளர்ச்சி சார்ந்த எண்ணமும் அதற்கான செயலும் ஜென்னி என்னும் ஒற்றை வார்த்தைக்குள் அடங்கிவிடுகின்றன. 

கார்ல் மார்க்ஸை விட அறிவும், செயலும், உத்வேகமும், 9 மொழிகளின் பேச்சு மற்றும் எழுத்து புலமையும் ஜென்னி மார்க்ஸ் கார்ல் மார்க்ஸூக்கு எழுதிய 25 கடிதங்கள் கூறுகின்றன. இருப்பினும் ஜென்னி கார்ல் மார்க்ஸை பல தடைகளுடன் மணந்த காரணம் இருவரும் ஒரு சேர பொதுவுடமை மற்றும் இலக்கியத்தில் கொண்ட தீரா காதலால் தான்.

வறுமை மற்றும் பஞ்சத்தின் காரணமாக இல்லை என்ற அளவுக்கு அத்தனையும் குறிப்பாக தம் 7 குழந்தைகளில் நால்வரை இழந்தும், தன் சுய விருப்பு வெறுப்புகளை கடந்து மார்க்ஸின் கொள்கைகளை தீர்க்கமாக ஆதரித்தவர்.

பின்னாளில் இருவரும் நுரையீரல் தொற்றுக்கு காரணமாக ஒருவருக்கொருவர் உடனான நேரடி தொடர்புகள் ஜென்னி மார்க்ஸின் இறுதி சடங்கு வரை இருவரையும் பெரிதும் துண்டித்தது.

கடைசியாக கார்ல் மார்க்ஸ் தன் இரங்கல் உரையில் கூறியதாவது,

"என் சுக துக்கங்களையும் என் கொள்கைகளின் மீதான காதலையும் என்னை விட ஒரு படி மேலாக என்னை நம்பிய என் ஜென்னி அசாத்தியங்களின் அடையாளம்" என்றார்.

அதன் பின்னர் சற்றே 15 மாதங்கள் தாக்கு பிடித்த கார்ல் மார்க்ஸ் 1883 காலமானார்.

தற்காலத்தவருக்கு பயன்படும் கார்ல் மார்க்ஸ் மற்றும் ஜென்னி உடனான புரட்சிக்கு காரணமான காதல் மார்க்ஸின் சமகாலத்தவருக்கு விளங்காத ஒன்று.

கடைசியாக பல தேடலுக்கு பின்,

மனித குலத்தின் மகத்துவமே காதலும் உழைப்பும் தான்❤️

என்னும் வாக்கியம் தற்காலத்திய 65 வயது நிரம்பிய Mary Gabriel என்னும் மேற்கத்திய எழுத்தாளரின்

'Love and Capital: Karl Marx and Jenny and a Birth of Revolution' கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை சரிதத்தின் பெயராகும்.

கிட்டத்தட்ட 2 நூற்றாண்டுகள் இன்றளவும் வரலாற்று பக்கங்களில் ஒவ்வொரு முறையும் படிக்க படிக்க உயிர் பெற்று கொண்டிருக்கிறார்கள் கார்ல் மார்க்ஸூம் ஜென்னி மார்க்ஸூம்..

லட்சியத்திற்கு துணை நின்ற காதலாக கார்ல் மார்க்ஸ் மற்றும் ஜென்னி காதல் கதை முடியாததாக என்றென்றும்

இனிய காதலர் தின வாழ்த்துகள் ❤️

Comments

Post a Comment

Popular posts from this blog

Why the Novel Matters? - Summary

First vision of "The vision of Mirza" - The Translation by Joseph Addison